மேஷம் ராசி அன்பர்களே …! சிறு தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்க்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். பொதுநலத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். மேலதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக்கருத்து கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள்.
குடும்பத்தில் இருப்பவருடன் நிதானமாகப் பேசுங்கள். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவ உங்கள் உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் விட்டுப் பிடிப்பது தான் ரொம்ப நல்லது. அதேபோல பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை.