Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…பொறுப்புகள் கூடும்… திறமை வெளிப்படும்…!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று தொட்டது துளிர்விடும் நாளாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பொறுப்புகள் கூடும், திறமை வெளிப்படும்.

வெளிநாடு தொடர்பான காரியங்கள் நல்ல முடிவை கொடுப்பதாகவே இருக்கும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரக் கூடும். மேலிடத்தில் நெருக்கம் கூடும். மேலிடத்தில் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுகிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நல்ல முறையில் இருக்கும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். திருமண முயற்சியில் வெற்றி  ஏற்படும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |