மேஷ ராசி அன்பர்களே …! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவிகளை செய்வார்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்பட கடன் உதவியும் கிடைக்கும். நேற்று பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள்.
வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு பண வரவு நல்லபடியாக வந்து சேரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பயணங்களில் மட்டும் கவனம் இருக்கட்டும். தோழிகளுடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.