மேஷ ராசி அன்பர்களே …! இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடிய நாளாக இருக்கும். தேவியின் அருளால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். திடீர் பயணத்தால் தித்திப்பான செய்திகள் வந்து சேரும். மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். மன அமைதியான சூழலை இருக்கும். திடீர் செலவுகள் அவ்வப்போது ஏற்படும். உங்களை காயப்படுத்தி சிலர் பேச கூடும்.
யாரிடமும் எந்தவித பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிக சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் கொஞ்சம் தாராளமாக இருந்தாலும் புதிய முயற்சிகள் மட்டும் இப்போதைக்கு வேண்டாம்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.