Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…பிரச்னைகள் நீங்கும்…லாபம் கூடும்…!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பக்குவமாக பேசி காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். செய்தொழிலில் லாபம் கூடும். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். உறவினர்கள் வழியாக நல்ல தகவல் வந்து சேரும். இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக தான் இருக்கும். புதிய முயற்சிகளை மட்டும் கொஞ்சம் கவனமாக மேற் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பாகவே இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மனமார வேண்டிக் கொள்ளுங்கள் அனைத்து விஷயமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |