Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தன்னம்பிக்கை துளிர்விடும்…அலைச்சல் அதிகரிக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாள் ஆக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். மனைவி வழியில் நல்ல செய்திகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். முயற்சி செய்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மனதை மட்டும் எப்போதும் தளர விடாமல். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

காதலர்களுக்கு இன்று ஓரளவு இனிமையான நாளாக இருந்தாலும் எப்போதும் போலவே வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்தால் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்:  3 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |