Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தொந்தரவுகள் நீங்கும்…விவாதங்கள் வேண்டாம்…!

மேஷ ராசி அன்பர்களே …!      இன்று குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள் வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். யாரைப் பற்றியும் குறை சொல்ல வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாகத்தான் நடக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதங்கள் ஏதும் வேண்டாம்.

உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது.

ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் நீல நிறம்.

Categories

Tech |