மேஷ ராசி அன்பர்களே …! இன்று உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்றுக் கொள்வதற்கு மறுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவரின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வந்து நிற்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். இன்று கவனமாக பேச வேண்டும்.
பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கட்கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.