மேஷ ராசி அன்பர்களே …! இன்று செல்வ நிலை உயர்ந்து, புதிய வாகனங்களை வாங்க கூடிய யோகம் இருக்கும். புதியதாக காதல் மலர்ந்து மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லா வளமும் பெருகி பெரிய மனிதன் என பெயர் எடுப்பீர்கள். உடல்நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறையாக இருங்கள். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
உள்ளது உள்ளபடி பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் மன கசப்புகள் உருவாகலாம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியாகவே காணப்படுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.