Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…போட்டிகள் குறையும்…வீண் அலைச்சல் உண்டாகும்…!

மேஷ ராசி அன்பர்களே …!     புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். அரிய சாதனைகளை புரிந்து புகழடைவீர்கள். புதிய நகைகள் மற்றும் செல்வங்கள் சேரும். இன்று நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்வீர்கள். வீண் அலைச்சல், செலவு கொஞ்சம் ஏற்படலாம். மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டி இருக்கும். அதனால் கொஞ்சம் கவனமாக எதிர்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். முடிந்தால் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளரிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |