மேஷ ராசி அன்பர்களே …! இன்று பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவாகும். இன்று மதியத்திற்கு மேல் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கும். உங்களை விட்டு விலகி இருப்பவர்கள் வலிய வந்து சேர்வார்கள்.
வீட்டில் நடைபெறும் சுபகாரியப் பேச்சுக்கள் இனிதே நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் மட்டும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி சில மாற்றங்கள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறிய தடைகள் உண்டாகலாம். பொறுமையாகவும், நிதானமாகவும் தான் இன்று செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். அதேபோல ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ஓரளவு சிறப்பை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.