மேஷ ராசி அன்பர்களே …! குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனவேதனை எல்லாம் சரியாகும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உங்களுடைய நிர்வாகத் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாக இருக்கும்.
தொழில் வியாபாரம் மூலம் வரவேண்டிய இலாபம் தாமதமாக வந்து சேரும். எதிர்பார்த்த நிதி உதவி ஓரளவு கிடைக்கும். அலைச்சல் குறையும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத சில மாற்றங்கள் வரலாம். யாரிடமும் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். புது நபரிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இயங்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அது மட்டுமில்லாமல் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.