மேஷ ராசி அன்பர்களே …! இன்று சில முக்கியமான பேச்சுவார்த்தைகளில் தடைகளும், தாமதங்களும் வந்து செல்லும். அதாவது இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் நீங்கள் செயல்பட வேண்டும். காரியங்களில் சாதகமான பலனைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உடன்பிறப்புகள் தக்க சமயத்தில் உதவியாக இருப்பார்கள். மனை, வண்டி வாகன யோகங்கள் கூட நல்லபடியாகவே அமையும்.
உற்றார் உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும், எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.