மேஷ ராசி அன்பர்களே …! இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். அவர்களை விட்டு விலகிச் செல்வீர்கள். இன்று எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.
பணவரவு திருப்திகரமாக அமையும். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவும் உண்டாகும். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றமும் யோகமும், வாய்ப்புகளும் கிடைக்கும்.
காதலர்களுக்கு இனிமை காணும் நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்.