மேஷ ராசி அன்பர்களே …! இன்று மனதில் சோம்பல் குணம் ஏற்படலாம். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பெற வேண்டும் விவாதிக்க வேண்டாம். பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள்.
தேவையான உதவிகள் கிடைத்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை என்பது அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கலாம் ஆகையால் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு பேசும் போது நிதானம் கண்டிப்பாக வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.