Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…பொறுப்புகள் கூடும்… திறமைகள் வெளிப்படும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று வெற்றிப் படி ஏறி வீரநடை போடுவீர்கள். பாக்கிகள் வசூலாகி தனவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் இன்பமும், ஏற்றங்களும் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டு.  அதற்கு தேவையான நிதி வசதிகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணியில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமைகள் வெளிப்படும்.  வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். காதலர்களுக்கும் ஏற்ற சிறப்பான நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது  நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |