Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…எண்ணம் மேலோங்கும்…நன்மதிப்பை பெறுவீர்கள்…!

மேஷ ராசி அன்பர்களே …! இன்று உறவினரின் செயலை தயவுசெய்து விமர்சிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை தனது கையில் நான் இயங்கும். லாபம் சுமாராக தான் இருக்கும். பெண்கள் அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். அதேபோல இன்று பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

பக்கத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். யாரையும் நீங்கள் தயவு செய்து குறை சொல்ல வேண்டாம். கூடுமானவரை செலவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தன வரவு நல்ல படியாகத்தான் இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். அதேபோல் பேச்சில் எப்போதுமே நிதானத்தை மட்டும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் தெய்வீக ஈடுபாட்டுடன் காரியங்கள் செய்யுங்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |