Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… ஆலோசித்து செயல்படுங்கள்…புதிய முயற்சிகள் வேண்டாம் …!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய எதிர்மறையான சில திருப்பங்கள் ஏற்படலாம். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசனை செய்யுங்கள். வருமானத்தில் ஏதும் குறை இருக்காது. தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

தொழிலில் ஆட்கள் கிடைப்பதில் மட்டும் ஓரளவு சிக்கலான சூழலல் இருக்கும்.இருப்பதை வைத்துக் கொண்டு அதை முன்னேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்திலிருந்து சண்டை நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும்.

இன்று வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள். புதிய முயற்சிகளை தயவுசெய்து தள்ளிப் போட்டால் ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |