Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… ஆதரவு கிடைக்கும்…அன்பு கூடும்…!

 

மேஷ ராசி அன்பர்களே …!   முன்னேற்றத்திற்கான புது அம்சங்களும் நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு தேடி வரும். பல வகையிலும் பணவரவு கூடும். புதிய நண்பர்கள் உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். எல்லாவித பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். சக ஊழியரிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று எல்லாம் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று செய்யும் காரியங்களில் நன்மை ஏற்படும். முடிந்த அளவு மற்றவர்களுக்கும் உதவிகளை செய்விர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும்,சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்:3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |