மேஷ ராசி அன்பர்களே …! நீண்ட நாட்களாக நீங்கள் வாங்க நினைத்த வாகனம் மற்றும் சொத்து போன்றவற்றை வாங்குவதற்கான யோகம் உண்டு. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அதிக அளவு அனைத்து விஷயங்களும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று எல்லாவிதத்திலும் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு திருப்தியான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையில் இணக்கமான போக்கு காணப்படும். சிரமங்கள் விலகி செல்லும். எதிர்பாராத அளவில் மாற்றம் இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். ஆனால் பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நீங்கள் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். மிக முக்கியமாக மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.