மேஷ ராசி அன்பர்களே …! இன்று உடல்நலக்குறைவு பெண்களால் பேரிழப்பு, தாயின் உடல்நிலையில் அக்கறை போன்றவை இன்று கண்டிப்பாக ஏற்படும். அதிகாரிகளையும் மதித்து நடப்பது ரொம்ப நல்லது. எதிர்பார்த்த லாபம் இருக்கும். வியாபாரத்தில் செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு கொஞ்சம் ஏற்படும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் வேண்டும்.
நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். பணவரவு ஓரளவு நல்லபடியாகவே இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனையே கொடுக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு வகைகள் உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
இன்று காதலர்கள் கண்டிப்பாக பேச்சில் நிதானத்தை கடைபிடித்து தான் ஆக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.