மேஷ ராசி அன்பர்களே …! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கும். இழுபறியான சில வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை நீங்கள் சந்திக்க கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் கொஞ்சம் உண்டாகலாம்.
சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை மட்டும் தயவு செய்து தடுக்க வேண்டும். இன்று உற்றார் உறவினரிடம் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.