Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…மனக்கசப்புகள் அகலும்…பணவரவு கிடைக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று உங்களுக்கு அதிக வேலைப்பளு உருவாகலாம். நண்பரின் ஆலோசனையின் நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களை செய்ய நேரிடும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல், தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது ரொம்ப நல்லது.

அவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உறவினர் வகையில் உதவிகளையும் பெறுவீர்கள். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவுகளை எடுத்து கொள்வது ரொம்ப நல்லது. காதலர்களுக்கு ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |