மேஷ ராசி அன்பர்களே …! இன்று வேண்டாத நபரை ஒருவரை நீங்கள் பொது இடத்தில் சந்திக்க நேரலாம். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். பணம் செலவு ஏற்படலாம். போக்குவரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு எதிர்த்து பேசியவர்கள் அடங்கி விடுவார்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருப்பதால் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையைக் கொடுக்கும். வியாபாரத்திற்காக புதிதாக பொருட்கள் வாங்குவீர்கள். ஓரளவு முன்னேற்றம் தரும் நாளாக தான் இன்று இருக்கும். காதலர்கள் கொஞ்சம் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். தேவையில்லாத விஷயத்தைப் பேசிவிட்டு வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.