Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்…பயணங்களில் கவனம் தேவை…!!

மேஷம் ராசி அன்பர்களே …!   பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்குடன் இன்று செயல்படுகிறீர்கள்.சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.தொழில் வியாபாரம் தொடர்பு பலம் பெரும். குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும்.இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழலும் அமையலாம். இன்று மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்குவதற்கான சூழலும் இருக்கும்.

வெளியூரில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். வெளியூர் பயணத்தையும் கவனமாகத்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் ஊரடங்கு உத்தரவு இருப்பதினால் தயவுசெய்து பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருந்து வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். காதலில் வயபடும்கூடிய சூழல் உண்டாகும். ஏற்கனவே காதலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3

அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை மற்றும் மஞ்சள்.

Categories

Tech |