உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் கால்பந்து விளையாட்டு வீரர் பார்சிலோனா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டத்தில் 36 கோல்களை அடித்து லீக்கின் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.இதன் காரணமாக இன்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து லீக் நிறைவு விழாவில் லியொனல் மெஸ்ஸி ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் உயரிய விருதான கோல்டன் ஷூவைப் பெற்றார்.
இது மெஸ்ஸி வாங்கும் ஆறாவது கோல்டன் ஷூ கோப்பையாகும். மேலும் இவர் இந்தாண்டு கோப்பையை பெற்றதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறை கேல்டன் ஷூ கோப்பையைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.மேலும் இது குறித்து மெஸ்ஸி கூறுகையில், இந்த விருதினை எனது குடும்பத்திற்கும், எனது சக அணி வீரர்களுக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட இரண்டு கோல்டன் ஷூ விருதினை அதிகமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Football: Barcelona captain Lionel Messi received his sixth Golden Shoe as the top scorer in the European leagues #Messi #LionelMessi pic.twitter.com/C3ekTEz3yF
— Doordarshan Sports (@ddsportschannel) October 16, 2019