Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையோரம் உள்ள உலோக தடுப்புகள்… மர்ம நபர்களின் கைவரிசை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையில் அமைத்துள்ள உலோக தடுப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ்குடி பகுதியில் இருந்து வாலசுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கும், வாகனங்களின் பாதுகாப்பிற்கும் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள உலோக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மர்ம நபர்கள் சிலர் அந்த உலோக தடுப்புகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெருநாழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடுப்புகளை திருடிய மர்ம நபர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |