வெவ்வேறு வகையில் உருமாறி வரும் கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
முதலில் பிரிட்டனிலும், அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்காவிலும், உருமாறிய வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருக்கும் வைரஸ்களை கட்டுப்படுத்தவே தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகளால், இவ்வாறு உருமாறும் வைரஸ்களை கட்டுப்படுத்த முடியுமா என்று, நிபுணர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
‘ஒரு சில உருமாறும் வைரஸ்கள், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுவதும், ஒரு சில வைரஸ்கள், கட்டுப்படாமல் இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, மனித உடல் தானே உருவாக்குவது தான் தடுப்பூசியின் வேலை. எதிர்ப்பு சக்தியால் கண்டறிய முடியாத வகையில், வைரஸ் உருமாறிக் கொள்வது தான் பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.