இந்திய பெருங்கடலில் இரவு சமயத்தில் பல்வேறு இடங்களில் எரிகற்கள் போன்ற பொருட்கள் எரிந்து விழுந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆசிய பகுதியின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் வானிலிருந்து எரிகற்கள் விழுவது போன்ற காட்சி தோன்றியது. இதனால் கண்ட மக்கள் பெரும் ஆச்சரியமடைந்தார்கள். ஆனால் அதன் பிறகு தான் அது எரிகற்கள் இல்லை என்றும் சீனாவின் ராக்கெட்டில் மீதமிருக்கும் கழிவுகள் என்றும் தெரியவந்திருக்கிறது.
இது குறித்து சீனாவின் விண்வெளி கழகம் தெரிவித்திருப்பதாவது, 23 டன் எடையுடைய மார்ச்-5பி ஒய் 3 என்னும் ராக்கெட் கடந்த 24 ஆம் தேதி என்று விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் கழிவுகள் தான் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கின்றன. இரவு சமயத்தில் பூமியை நோக்கி அவை விழுந்ததால் எரிகற்கள் போன்று காட்சியளித்திருக்கிறது.
https://twitter.com/nazriacai/status/1553424586624335872
தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மஞ்சள் சிவப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இரவில் எரிந்து கொண்டே ராக்கெட் கழிவுகள் பூமியில் விழுந்திருக்கின்றன.