தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 சென்டிமீட்டர்,கன்னியாகுமரி கொடைக்கானலில் 13 சென்டிமீட்டர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 12 சென்டிமீட்டர் திருவாரூர் 9 சென்டிமீட்டர் மகாபலிபுரத்தில் ஏழு செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குமரி கடல் பகுதிகளில் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதன் காரணமாக லட்சத்தீவு அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.