14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை, இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்தும் ஐபிஎல் போட்டியை நடத்துவதில் ,ஆர்வம் காட்டி வருகின்றது. ஏனெனில் இந்திய அணி செப்டம்பர் மாதத்தில், இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் , மீதமுள்ள ஐபிஎல் போட்டியை அங்கு நடைபெற்றால், சிறப்பானதாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிசிசிஐ , ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதியிருக்கும் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு வெற்றிகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றதால், இந்த வருடமும் மீதமுள்ள போட்டியை, ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஆனால் இது பற்றி தெளிவான முடிவை பிசிசிஐ இன்னும் எடுக்கவில்லை.