எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை , இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் .
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் தலைவரான சௌரவ் கங்குலி ,செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என்று கூறியுள்ளார் . இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே மீதமுள்ள போட்டியை நடத்துவதற்கான தேதி விரைவில், அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.