Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபில் போட்டிகளை நடத்துவதற்கு … ‘ஐடியா கொடுத்துள்ள கெவின் பீட்டர்சன்’…!!!

மீதமுள்ள ஐபில் போட்டிகளை ,இங்கிலாந்தில் நடத்தலாம் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த முடியவில்லை என்றால், சுமார் 2,500 கோடி  ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.இது பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார் .

இதுபற்றி அவர் கூறும்போது மீதமுள்ள ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தால் சிறப்பாக இருக்கும், என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர் . ஆனால் என்னுடைய கருத்தின்படி மீதமுள்ள ஐபிஎல் போட்டியை இங்கிலாந்தில் நடந்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாட உள்ளதால் இங்கு தங்கியிருப்பார்கள். இதைத்தொடர்ந்து உலக கோப்பை டி20 போட்டிக்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் குறுகிய கால இடைவெளியில் மீதமுள்ள போட்டியை முடிக்க வேண்டும்  என்பதால் , இங்கிலாந்தில் போட்டி நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டியை இங்கிலாந்தில்  நடத்துவதற்கு, மைதானங்களும் தயாரான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |