மீதமுள்ள ஐபில் தொடர்களை , ஒரே மைதானத்தில் நடத்தி முடிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது .
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும், ஐபிஎல் தொடர் மறுபடியும் நடைபெறலாம், என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரத்தில் வந்த தகவலின் படி, தற்போது அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களும் பாதுகாப்புடன் இருப்பதே பிசிசிஐ-யின் முக்கிய நடவடிக்கையாகும்.
எனவே கூடிய விரைவில் அணியில் பங்குபெற்ற வீரர்கள் பழைய நிலைக்கு திரும்பி விட்டால், மறுபடியும் சில மாதங்களுக்குள் , ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுகிறது. ஆனால் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளை , ஒரே மைதானத்தில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக மும்பையில் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்தில் டெஸ்ட் மற்றும் உலக கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற இருப்பதால் , ஐபிஎல் தொடரை உடனடியாக நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதத்திற்குள் கட்டாயம் நடத்தி முடிக்கபடும் ,என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.