மெது பக்கோடா
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
நெய் அல்லது டால்டா – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு , நறுக்கிய வெங்காயம் , இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை , உப்பு ஆகியவற்றை பிசறிக் கொள்ள வேண்டும். பின் டால்டாவை உருக்கி சூடாக மாவில் சேர்த்துப் பிசறிக்கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெயைக் காய வைத்து பிசறிய மாவை உதிர்த்து விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் மெது பக்கோடா தயார் !!!