சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடியுடன் இரண்டு நாட்கள் முறைசாரா சந்திப்பு நடத்தும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சில நிமிடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் செல்லக்கூடிய கிண்டியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஓட்டல் சாலை முழுவதுமாக 30 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ , மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
முதல் கட்டமாக சென்னை 5_ஆவது நுழைவாயிலில் இருந்து அவர் வெளியே வரும்போது செண்டை மேளங்கள் முழங்க அவரை வரவேற்பதற்க்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளது. சீன அதிபரை வரவேற்க கவர்னர் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் அமைச்சர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக அவர் செல்லக்கூடிய பாதை மூலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல அவர் செல்லக்கூடிய அந்த நேரத்தில் மீனம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அவர் செல்லக்கூடிய பாதை முழுவதுமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவர் பலத்த பாதுகாப்போடு கிண்டியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். குறிப்பாக அவர் நட்சத்திர ஓட்டலுக்கு செல்லக்கூடிய அந்தப் பாதை முழுவதுமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுகின்றது. அதேபோல அவர் தங்கக்கூடிய கிண்டி நட்சத்திர ஓட்டலிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் மாமல்லபுரம் என மொத்தம் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர் சென்று நட்சத்திர ஓட்டலில் ஓய்வு எடுப்பார். அதன் பிறகு மாலை மாலையில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்ல இருக்கிறார்.