Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தடைபடுமா….? ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு….!!

மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே நிர்வாகம் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை அடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பாதிப்பானது படிப்படியாக குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

மேலும் ரயில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் மக்களின் வசதிக்காக இயக்கப்பட்டன. அதிலும் முதலில் மெட்ரோ ரயில் சேவைகள் முன்களப்பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் வரத்து அதிகரிக்கவே நோய் தடுப்பு கட்டுப்பாடு விதிமுறைகளின் படி ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்வரவை பெற்றது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் சென்னையில் வழக்கம் போல் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிலும் திங்கள் முதல் சனி வரை காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் ரயில்கள் இயக்கப்படும். குறிப்பாக கூட்டநெரிசல் மிகுந்து இருக்கும் சமயங்களில்  காலை 8 முதல் 11 மணி வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியில் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |