கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெறுவதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெறுவதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ரூபாய் 6,683 கோடியில் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.