கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாடையில் காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்த்துள்ளது.
மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது நெல்லிமலையில் ஆண் யானை ஒன்று நடக்க முடியாமல் இருந்ததைக் கண்டறிந்தனர். அதனுடன் மேலும் சில யானைகள் இருந்ததால் வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில்அந்த யானை நெல்லிமலையில் காப்புக்காட்டில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனையடுத்து காட்டு யானைக்கு வனதுறையினர் குளுகோஸ் ஏற்றி நேற்று இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலன் தராமல் ஆண் யானை இறந்துவிட்டது . காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் யானையின் தாடையில் காயம் ஏற்பட்டதால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக வனதுறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காட்டு யானையை உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறையினர் நெல்லிமலை காட்டில் புதைதுள்ளனர்.