மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.
தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது தற்போது 65_ஆவது முறையாக அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2.10 லட்சம் கன அடியாக இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.