Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… 2,10,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.10 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.காலையில் 1.65 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது.நீர் மட்டம் காலை 67 அடியாக இருந்த சூழலில் 18 அடி அதிகரித்து தற்போது 85 அடியை தாண்டிள்ளது.இதனால் ஒரே நாளில் 18 அடி உயர்ந்துள்ளது.நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for மேட்டூர் அணை

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கின்றது.இதனால் அணையின் நீர்மட்டம்  மேலும்  உயர்ந்துள்ளது. மூன்று நாட்களுக்கு கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில்  தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |