இன்று காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கின்றார்.
கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது 100 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில் அணையில் போதிய நீர் இருப்பு இருந்தால் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறந்து விடுவது வழக்கம். இதனால் அணையை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலமாக மாலை கோவை சென்றார். அங்கிருந்து சேலம் சென்ற அவர் இன்று காலை 8.30 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று நீரை திறந்து விடுகின்றார். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மேட்டூர் அணையின் மூலம் வரும் தண்ணீரால் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற இருக்கின்றன.காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீரை நிரப்பி, அதன் மூலமாக விவசாய பாசனத்துக்கு நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.