டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வரக்கூடிய தண்ணீர் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்றைய நிலவரப்படி கொள்ளிடத்தில் இருந்து 709 கனஅடி, கல்லணை கால்வாய் இருந்து 501 கனஅடி, காவேரியில் இருந்து 3,015 கனஅடி, வெண்ணாறு 3,000 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள 3.5 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,002 கன அடியில் இருந்து 2,210 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக குறைந்துள்ளது. 308 நாட்களுக்கு பிறகு இன்று இரண்டாவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 63.6 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 2,233 கனஅடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது.