Categories
ஆன்மிகம் இந்து

“மெட்டி முதல் குங்குமம் வரை”… திருமணமான பெண்களே… கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க…!!!

திருமணமான பெண்கள் மெட்டி அணியும் போது குங்குமம் வைக்கும் போது கோலம் போடும்போது இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் தண்ணீர் தெளித்து கோலம் போடும்போது தெற்கு பார்த்து நின்று கோலம் போடக்கூடாது. பெண்கள் எப்போதும் வடக்கு அல்லது சூரியனைப் பார்த்தவாறு கோலமிட வேண்டும். மார்கழி மாதத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் கர்ப்பமான பெண்கள் உக்கிரமான சாமிகள் இருக்கும் கோவிலுக்கு செல்லக்கூடாது. விரதம் கடைபிடிப்பது போன்றவை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். நெற்றியிலும் உச்சியிலும் குங்குமம் வைக்கும் பெண்கள் கிழக்கு திசையை நோக்கி நின்று குங்குமம் வைக்க வேண்டும்.

திருமணமான பெண்கள் கால்களில் மெட்டி போடும்போது ஒரு காலில் ஒரு விரலை மட்டும் மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அணிதல் கூடாது. அவ்வாறு அணிவதால் கணவனின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பாதிப்பு அடையும்.அதேபோல் திருமணமான பெண்கள் கணவனுக்கு சாப்பாடு போடும் பொழுது கைகளில் வளையல் இல்லாமல் சாப்பாடு போடக் கூடாது. சாப்பிடும் போது கணவன் மனைவி இருவரும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடக்கூடாது. கணவனின் அருகில் அமர்ந்து சாப்பிடலாம்.

Categories

Tech |