Categories
உலக செய்திகள்

இடிபாடுகளில் இருந்து…. கண்டெடுக்கப்பட்ட மரப்படகு…. ஆயிரம் ஆண்டுகள் பழமை….!!

இடிபாடுகளில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரப்படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் Chichen Itza என்னும் மாயா நகரத்தில் உள்ள இடிபாடுகளில் இருக்கும் ஒரு குகையில் இருந்து  சிறிய மரப்படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த படகானது 1.6 மீட்டர் நீளமும் 80 சென்டிமீட்டர் அகலமும் உடையது. குறிப்பாக இது குடிநீர் கொண்டு செல்வதற்காகவோ அல்லது விழாக்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு போகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகானது ரயில் பாதை திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளும் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாயன் நாகரீகத்தைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |