மராட்டிய மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 31 வரை நீட்டிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில் தற்போது அதனை மே 31 வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இத்தகவலை மாராட்டியின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டி இருந்த நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் ஊரடங்கை நீட்டித்தால் கொரோனா பாதிப்பின் வேகம் குறையும் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.