இத்தாலியில் சமூக இடைவெளியை பின்பற்றாத மேயருக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது
சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.இதனால் அந்நாட்டுஅரசு ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முக கவசங்கள் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தாலி நாட்டில் இருக்கும் வெண்டிமிக்லியா நகரின் மேயர் காய்டனோ ஸ்குலினே அங்கிருக்கும் வீட்டின் மாடியில் நெருக்கமாக ஒருவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அப்பொழுது கையுறையும் முகக்கவசமும் அவர் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியை அவர் பின்பற்றவில்லை. அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மேயருக்கு ரூபாய் 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு மேயரும் தான் செய்தது முட்டாள்தனமான செயல் என்பதை ஒப்புக்கொண்டார்.