மகர ராசி அன்பர்களே …! இன்று புதிய நம்பிக்கை ஏற்படும் நாளாக இருக்கும். மற்றவரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் அனுகுலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வயிறு சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரைப் பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது ரொம்ப நல்லது.
எண்ணிய காரியம் கைகூடும். தொழில் அலைச்சல் குறையும். சிக்கலான பிரச்சினைகளிலும் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். ஆனால் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டாமல் காரியத்தைச் செய்யுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும்.
பொறுப்புகள் கூடும் நாள் ஆகவே இன்று இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.