எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனைத்தை அமைசான் வாங்கி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த நிறுவனதில் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறது. இதற்கிடையில் அமேசான் நிறுவனம் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை விளைக்கு வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் அமேசான் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் “64 ,722 கோடி ரூபாய்க்கு எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை வாங்கி உள்ளதாகவும். மேலும் இந்த நிறுவனத்தின் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும், யாரையும் பணி நீக்கம் செய்யப்படவில்லை” என்பதையும் தெரிவித்துள்ளது