Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

MGR கட்சியால் வந்த சோதனை…. வேதனையில் கமல்….. புலம்பவிட்ட தேர்தல் ஆணையம் …!!

மக்கள் நீதி மைய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க வில்லை. அது எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மையம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு வழங்கிய டார்ச்லைட் சின்னத்தை மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு வழங்க வேண்டும் என்கின்ற ஒரு முறையீட்டை  தேர்தல் ஆணையத்தில் செய்திருக்கிறார்கள்.

முன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மையம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தமிழகத்தில் அவர்களுக்கு அந்த சின்னத்தை மறுத்தும் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. சட்டமன்ற தேர்தல் பரப்புரையிலும் கூட கமலஹாசன்,  நிச்சயம் டார்ச்லைட் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மக்கள் நீதி மையம் செய்யும் எனவும் அதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளை தாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.அந்த வகையிலேயே தற்போது மக்கள் நீதி மையம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் டார்ச் லைட் கேட்டு முறையிடு  செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |